நிச்சயமாக குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். எனினும் நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே. மேலும் அவர்கள் (நரகத்தில்) ”யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ”நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். 43:(74-77)
”அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும் அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பர்” என் (நபியே!) நீர் கூறும். 72:23
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். 4:56
”எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” (என்றும் கூறுவர்.)(அதற்கவன்) ”அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான். 23:(105-108)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்” என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப் படுத்தப்) போதுமானதாயிற்றே” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அப்படியல்ல) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்” என்றார்கள் .புஹாரி : 3265 அபூஹூரைரா (ரலி).
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஒரு சபையில்) இருந்தோம், அப்போது திடீரெண்டு பாரிய சத்தத்துடன் ஒரு பொருள் விழுந்ததின் சத்தத்தை கேட்டோம், இது என்ன சத்தம் என்பது உங்களுக்கு தெரியுமா? என நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் கேட்டார்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவார்கள் என நாங்கள் கூறினோம். அது, எழுபது ஆண்டு காலமாக அல்லாஹ் நரகத்தில் வீசிய ஒரு கல்லாகும், இப்போதுதான் நரகத்தின் அடித்தழத்தை சேந்திருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாளை மறுமையில்) உலகத்தில் மிகவும் அருட்கொடைகளுடன் வாழ்ந்த ஒரு நரகவாதியை கொண்டு வரப்பட்டு, அவனை நரகத்தில் ஒரு முறை மூழ்கி எடுக்கப்படும், பின்பு அவனிடத்தில், ஆதமுடைய மகனே! (உலகத்தில்) ஏதாவது நலவை கண்டாயா? ஏதாவது நலவை அனுபவித்தாயா? என்று கேட்கப்படும். அதற்கு அவன், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இல்லை இறைவா, எனக்கூறுவான். (நாளை மறுமையில்) உலகத்தில் மிகவும் வறுமையில் வாழ்ந்த ஒரு மனிதனை கொண்டு வரப்பட்டு, அவனை சுவர்க்கத்தில் ஒரு முறை மூழ்கி எடுக்கப்படும், பின்பு அவனிடத்தில், ஆதமுடைய மகனே! (உலகத்தில்) ஏதாவது கஷ்டத்தை கண்டாயா? ஏதாவது கஷ்டத்தை அனுபவித்தாயா? என்று கேட்கப்படும். அதற்கு அவன், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இல்லை இறைவா, எனக்கூறுவான். (முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாளை மறுமையில் நரகவாதிகளிலிருந்து ஒருவரை கொண்டு வரப்பட்டு, இந்த பூமியிலுள்ளவைகள் உனக்காக இருந்து (நரகத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்காக) அதை நீ அற்பணமாக கொடுப்பாயா? என்று கேட்கப்படும், அதற்கு அவன் ஆம் எனக்கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான், நான் உன்னிடமிருந்து அதைவிட இலகுவானதையே விரும்பினேன். நீ ஆதமுடைய முதுகம் தண்டில் இருக்கும் போது, எனக்கு கொஞ்சம் கூட இணைவைக்கக்கூடாது என உன்னிடம் உறுதி மொழி எடுத்தேன், நீயோ, அதை மறுத்து எனக்கு இணைவைக்கக்கூடியவனாகவே இருந்தாய் என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டைக் கொண்டாவது நரகத்தை பயந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுவர்க்கமும் நரகமும் தற்கித்துக் கொண்டது, நரகம் கூறியது, அடக்கி ஆழ்பவர்களும் பெருமையடித்தவர்களைக் கொண்டு நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். சுவர்க்கம் கூறியது, பலஹீனர்களும், மனிதர்களால் மதிக்கப்படாதவர்களும், இயலாவாளிகளுமே என்னிடம் நுழைவார்கள். அல்லாஹ் சுவர்க்கத்திற்கு கூறினான், நீ என்னுடைய அருட்கொடையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு அருள்புரிவேன். அல்லாஹ் நரகத்திற்கு கூறினான், நீ என்னுடைய தண்டனையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு தண்டிப்பேன். உங்களில் ஒவ்வொருவரையும் அவர்களைக் கொண்டு நிரப்புவேன். நரகமோ நிரம்பாது, அப்போது அல்லாஹ் தன் கால் பாதத்தை நரகத்தின் மீது வைப்பான், அப்போது அது போதும் போதும் எனக்கூறும், அதில் சிலது சிலதுடன் சேர்ந்து விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாளை மறுமையில் ஒரு மனிதனை கொண்டு வரப்பட்டு, நரகத்தில் வீசப்படும், அவனுடைய குடல் நரகத்தில் வெளியாகி, திருகையை சுத்தும் கழுதையைப் போன்று அவன் சுத்துவான். நரகவாதிகள் அவனிடம் ஒன்று சேர்ந்து, ஓ மனிதனே! உனக்கு என்ன நேர்ந்தது? நீ எங்களுக்கு நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியவனாக இருக்கவில்லையா? (என கேட்பார்கள்) அதற்கு அவன் கூறுவான், நான் உங்களுக்கு நன்மையை ஏவக்கூடியவனாக இருந்தேன், (ஆனால்) அதை நான் செய்யமாட்டேன், தீமையை விட்டும் உங்களை தடுக்கக்கூடியவனாக இருந்தேன், (ஆனால்) அதை நான் செய்வேன் என அவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் நம் அனைவரையும் கொடிய நரகத்தின் தீங்கிலிருந்து பாதுகாப்பானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக